தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

வீட்டிலிருந்தே ரேசன் கார்டில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது

வீட்டிலிருந்தே ரேசன் கார்டில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது மற்றும் புதிதாக ரேசன் கார்டு எடுப்பது ?

முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் செல்லவும்.


வலது பக்கத்தில் இத்தகைய மெனு இருக்கும். இதில் நீங்கள் செய்ய விண்ணப்பிக்க வேண்டியவற்றை தேர்ந்தெடுத்தவுடன், உங்களது ரேசன் கார்டில் பதியப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்யவும். அவ்வாறு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும்படியான ஒரு 6இலக்க எண் இருக்கும் அதனை உள்ளீடு செய்தவுடன் உங்களது தகவல் திரையில் தோன்றும்.

பதிவு செய்யப்பட்ட பயனாளர்

குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிட்டு "பதிவு செய்" அழுத்தவும். நீங்கள் கேப்ட்சா குறியீடு உள்ளிடுவதற்காக வழிநடத்தப்படுவீர்கள். சரியான கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட பிறகு, தாங்கள் ஒரு முறை கடவுச்சொல்(லை) உடனடியாக பெறுவீர்கள்.
-

கேப்ட்சா குறியீடு

கேப்ட்சா குறியீடு















பின்பு நீங்கள் உறுபினர் சேர்ப்பது நீங்குவது போன்ற வேலையை எளிதாகச் செய்யலாம். உறுப்பினர் சேர்க்கும் போது நீங்கள் உறுபினரது ஆதார் கார்டை 1MB அளவுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உறுப்பினரை நீக்குவதற்கு முறையான காரணத்தை மற்றும் சான்றிதலை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணம் 1MB க்குள் இருக்க வேண்டும்.

உங்களது குடும்ப விபரம் தொடர்ப்பான ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய 


மெனுவில் "என் விபரம்" என்பதை கிளிக் செய்தவுடன் உங்களது தகவல் இடம்பெறும். அந்தப்பக்கத்தில் கீழே மின்னனு அட்டை கோப்பு பதிவிறக்கம் செய்க என்ற பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் உங்களது கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும். அதில் உங்கள் குடும்ப உறுப்பினர் விபரம் குடும்ப தலைவர் புகைப்படத்துடன் இடம்பெற்றிருக்கும்.



மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின்,eightlegbuilders (at) gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். நாங்கள் உதவுகிறோம்.
 
















கருத்துரையிடுக

0 கருத்துகள்