தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

தினம் ஒரு தகவல்.. முகநூலில் இருந்து

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...

  • குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
  • எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
  • சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

    • 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
    • 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
    • 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
    • 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
    • 5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
    • 6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
    • 7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

    நிலத்தை அளக்கும் அளவு முறைகள்

    நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

    • 1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா
    • 2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
    • 3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

    ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

    நில அளவீடுகள்

    • 1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
    • 1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
    • 1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
    • 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
    • 1 சென்ட் – 435.6 சதுர அடி
    • 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
    • 1 குழி – 144 சதுர அடி
    • 1 சென்ட் – 3 குழி
    • 3 மா – 1 ஏக்க‍ர்
    • 3 குழி – 435.6 சதுர அடி
    • 1 மா – 100 குழி
    • 1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
    • 1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

    ஏக்கர்

    • 1 ஏக்கர் – 100 சென்ட்
    • 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
    • 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
    • 1 ஏக்கர் – 43560 ச.அடி
    • 1 ஏக்கர் – 4046 ச மீ

    செண்ட்

    • 1 செண்ட் – 001 ஏக்கர்
    • 1 செண்ட் – 0040 ஹெக்டேர்
    • 1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
    • 1 செண்ட் – 435.54 ச.அடி
    • 1 செண்ட் – 40.46 ச மீ

    ஹெக்டேர்

    • 1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
    • 1 ஹெக்டேர் – 247 செண்ட்
    • 1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
    • 1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
    • 1 ஹெக்டேர் – 10,000 ச மீ

    ஏர்ஸ்

    • 1 ஏர் – 2.47 செண்ட்
    • 1 ஏர் – 100 ச.மீ
    • 1 ஏர் – 1076 ச.அடி
    • 100 குழி = ஒரு மா
    • 20 மா = ஒரு வேலி
    • 3.5 மா = ஒரு ஏக்கர்
    • 6.17 ஏக்கர் = ஒரு வேலி
    • 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
    • 1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

    நீட்டலளவை

    • 10 கோண் = 1 நுண்ணணு
    • 10 நுண்ணணு = 1 அணு
    • 8 அணு = 1 கதிர்த்துகள்
    • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
    • 8 துசும்பு = 1 மயிர்நுனி
    • 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
    • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
    • 8 சிறு கடுகு = 1 எள்
    • 8 எள் = 1 நெல்
    • 8 நெல் = 1 விரல்
    • 12 விரல் = 1 சாண்
    • 2 சாண் = 1 முழம்
    • 4 முழம் = 1 பாகம்
    • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
    • 4 காதம் = 1 யோசனை
    • வழியளவை
    • 8 தோரை(நெல்) = 1 விரல்
    • 12 விரல் = 1 சாண்
    • 2 சாண் = 1 முழம்
    • 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
    • 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
    • 4 குரோசம் = 1 யோசனை
    • 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

    நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

    • 16 சாண் = 1 கோல்
    • 18 கோல் = 1 குழி
    • 100 குழி = 1 மா
    • 240 குழி = 1 பாடகம்

    கன்வெர்ஷன்

    • 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
    • 1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
    • 1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
    • 1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

    பிற அலகுகள்1

    • ஏர் = 100 சதுர மீட்டர்
    • 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்

    தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.

  • 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
  • 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
  • நில அளவை

    • 100 ச.மீ - 1 ஏர்ஸ்
    • 100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
    • 1 ச.மீ - 10 .764 ச அடி
    • 2400 ச.அடி - 1 மனை
    • 24 மனை - 1 காணி
    • 1 காணி - 1 .32 ஏக்கர்
    • 144 ச.அங்குலம் - 1 சதுர அடி
    • 435 . 6 சதுர அடி - 1 சென்ட்
    • 1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
    • 100 சென்ட் - 1 ஏக்கர்
    • 1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
    • 2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
    • 1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
    • 1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
    • 100 சென்ட் = 4840 சதுர குழிகள்
    • 1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
    • 1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
    • 1 ஏக்கர் = 43560 சதுர அடி
    படித்ததில் பகிர நினைத்தது...

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்