தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

ஆனந்தம் உயர் கல்வி உதவி திட்டம்

ஆனந்தம் உயர் கல்வி உதவி திட்டம்

12 ஆம் வகுப்பிற்குப் பிறகு, மேற்கொண்டு படிக்க வசதியில்லாத மாணவ – மாணவியரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான முழு கல்விச் செலவையும் ஏற்று உயர்கல்வி படிக்க வைக்கிறது ஆனந்தம் (Anandham Youth Foundation).

பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும், சமூக ஆர்வமிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆனந்தம் அமைப்பை நடத்துகிறார்கள். 2020 ஆம் ஆண்டு வரை MBBS, Engineering, Law, Agri, என பல வகையான படிப்புகளில் 491 மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கியிருக்கிறது ஆனந்தம்.

பட்டதாரிகள் என்பதையும் தாண்டி, வாழ்வின் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர் கொண்டு ஆனந்தமாகவும், சமூக அக்கறையோடும் வாழக்கூடிய நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆனந்தம் அமைப்பின் முதன்மையான நோக்கம். அதற்காக தொடர்ச்சியான வாழ்வியல் பயிற்சிகளையும் அளித்து வருகிறது ஆனந்தம்.

ஆனந்தத்தின் மூலம் பயின்ற மாணவர்கள் தற்போது பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் (Indian Railways, Indian Post, TN Govt. TCS, HCL, Infosys, CTS, IBM, Oracle, Accenture, TVS Group, ITC, CEAT, Canara Bank, South Indian Bank) பணியாற்றுவதோடு ஆனந்தத்தின் கல்விப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு செய்யப்படும் முறை:

12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றும், படிப்பின் மீதான ஆர்வமும், திறமையும் இருந்தும் கூட, குடும்பப் பொருளாதார சூழ்நிலையால் படிப்பை கைவிடும் நிலையில் இருக்கும் தகுதியான மாணவர்களைக் கீழ்காணும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்:

எந்த முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்கள்

தாய் / தந்தையை இழந்த மாணவர்கள்

பெற்றோர் இருந்தாலும், உடல் நிலை காரணமாக வருமானம் ஈட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள்

பெற்றோர் தினக்கூலியாக இருத்தல்

குடும்பத்தின் முதல் பட்டதாரி

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் முதற்கட்டமாக தொலைபேசி வழியாக நேர்காணல் நடத்தி, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் வீடுகளுக்கு இரண்டாம்கட்டமாக, ஆனந்தம் குழுவினர் நேரடியாகச் சென்று குடும்பப் பின்னணி விவரங்களை உறுதி செய்வர். மூன்றாவது கட்டமாக நேர்முக தேர்வு நடத்தி அதில் தேர்ந்துதெடுக்கப்படும் மாணவர்கள் ஆனந்தம் உயர் கல்வி திட்டத்தில்இணைக்கப்படுவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் உதவி தேவைபட்டால், உங்களது பெயர் , தொலைபேசி எண், ஊர் ஆகிய விவரங்களை 95519 39551 எண்ணிற்கு WhatsApp அல்லது SMS அனுப்பவும். ஆனந்தம் அமைப்பிலிருந்து தங்களை தொடர்புகொள்வார்கள்

இந்த Online விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது கீழ்காணும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால் அவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் ஆவணங்கள் அனைத்தயும் ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்யவும். ஆவணங்களை போட்டோ (Photo) எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்:

மாணவரின் புகைப்படம் (PP Size)

மாணவரின் ஆதார் நகல்

10th, 11th மற்றும் 12th மதிப்பெண் சான்று நகல்.

குடும்ப அட்டை நகல்

சாதி சான்றிதழ் நகல்

தலைமை ஆசிரியர் பரிந்துரை கடிதம் - இந்த படிவத்தை பிரிண்ட் (print) எடுத்து பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும். - Download PDF

குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம், உங்கள் கல்வி மற்றும் இதர சாதனைகள் ஆகியவற்றை விளக்கமாகவும், என்ன மேற்படிப்பு படிக்க விரும்புகிறீர்கள் என்ற விவரங்களுடன் மாணவர்கள் தங்கள் கைப்பட தனியாக விண்ணப்ப கடிதம் ஒன்றையும் தனியாக எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும். (2 பக்க அளவில்)

தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதனை உறுதிசெய்யும் வகையில் உண்மையான தகவல்களை அளிக்குமாற்று கேட்டுக்கொள்கிறோம். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்தால் விண்ணப்பம் முழுமையாக நிராகரிக்கப்படும். மாணவர் சேர்க்கையில் ஆனந்தம் மாணவர் தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.

இணையதள முகவரி

கருத்துரையிடுக

0 கருத்துகள்