தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

பட்ட சிட்டா மற்றும் அ பதிவேடு விவரங்களை ஆன்லைனில் பார்வையிட மற்றும் அதனை நகல் எடுக்க


1. முதலில் இந்த இணையதளத்திற்கு செல்லவும்
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html

 நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட

இந்த திரை தோன்றியவுடன் நில உரிமை ... ஐ பட்ட சிட்ட விவரங்களை பார்வையிட கிளிக் செய்யவும்.
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட இரண்டாவது உள்ளதை கிளிக் செய்யவும்.

இந்ததிரை தோன்றியவுடன் மாவட்டதை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கிராம்ப்புறமா அல்லது நகர்ப்புறமா என்பதை தேர்வு செய்தவுடன் அதற்கான கிராமம் அல்லது நகரம் வரிசைப்படுத்தப்படும். அதையும் தேர்வு செய்தவுடன்
சர்வே நம்பர் அல்லது பட்ட நம்பர் கேட்கப்படும்.
அதற்கான திரை கீழே,

சரியான எண்ணை பதிவு செய்தவுடன் அங்கீகார மதிப்பை உள்ளீடு செய்ய வேண்டும். அங்கீகார மதிப்பு என்பது கருப்பு எழுத்தில் கட்டத்திற்குள் இருக்கும் எண்களாகும். உங்களிடம் பட்டா எண் இல்லை என்றால் புல எண் அதாவது சர்வே நம்பர் மற்றும் அதன் உட்பிரிவு அதாவது சப் டிவிசன் எண்ணை உள்ளீடு செய்யவும். அவ்வாறு செய்தவுடன் உங்களுக்கான பட்ட/சிட்டா உடனடியாக அடுத்த திரையில் தோன்றும் அதை நீங்கள் நகலெடுத்துக்கொள்ளலாம் அல்லது PDF-ஆக சேமித்து வைத்துக்கொள்ளலாம். 

இந்தப் பதிவு உதவிகரமானதாக் இருந்தால் சேர் செய்யவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்